சென்னை: மெரினா கடற்கரை சாலையில் தீவுதிடல் அருகே அமைந்துள்ள போர் நினைவுச் சின்னத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்தினார்.
1971 ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச விடுதலைப் போரில் இந்தியா வெற்றி பெற்ற 50 வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் தீவுத்திடல் அருகே அமைக்கப்பட்டுள்ள போர் நினைவுச் சின்னத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார்.
1971 ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச விடுதலைப் போரானது பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடந்தது. இப்போரில்,டிசம்பர் 16 ஆம் தேதி இந்தியாவும் முக்தி பாஹினியும் (வங்காளதேச விடுதலை இராணுவம்) வென்று வங்கதேசம் உருவாக்கப்பட்டது.அப்போது,சுமார் 90,000 பாகிஸ்தான் போர் வீரர்கள் சரணடைந்தனர். இதுதொடர்பாக சென்னையில் போர் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவு சின்னத்தில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16 ஆம் தேதி வங்கதேச விடுதலைப் போரில் இந்தியா வெற்றி பெற்ற தினம் கொண்டாடப்படுகிறது. அத்துடன் போரில் வீரமணம் அடைந்தவர்களுக்கு மரியாயும் செலுத்தப்படுகிறது.
இந்த ஆண்டு வங்கதேச விடுதலைப் போரில் இந்தியா வெற்றி பெற்ற 50 வது ஆண்டு தினத்தை முன்னில் போர் நினைவுச்சின்னத்தில் மரியாதை செய்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு வைக்கப்பட்டிருந்த பதிவேட்டில், ”வங்கதேச விடுதலைப் போரில் வீரமரணம் அடைந்த போர் வீரர்களுக்கு எனது வீர வணக்கம்” என்று எழுதி கையெழுத்திட்டுள்ளார்.