மும்பை
கரண் ஜோஹர் இல்லத்தில் நடந்த பார்ட்டியில் கலந்து கொண்ட கரீனா கபூர் உள்ளிட்ட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோகர் வீட்டில் கடந்த 8 ஆம் தேதி அன்று ஒரு பார்ட்டி நடந்துள்ளது. இந்த பார்ட்டியில் பாலிவுட் பிரபலங்களான கரீனா கபூர், அம்ரிதா அரோரா, சீமா கான், மஹீப் கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த பார்ட்டியில் மேலே கூறிய 4 பேர் உள்ளிட்ட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது.
இந்த தொற்று முதலில் சீமா கானுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் பிறகு கரீனா, அம்ரிதா ஆகியோர் சோதனை செய்து கொண்டதில் அவர்களுக்கும் தொற்று உறுதி ஆகி உள்ளது. கொரோனா தொடங்கிய காலத்தில் இருந்தே கரீனா பாதுகாப்புடன் நடந்து கொண்ட போதும் அவருக்கு இந்த முறை கொரோனா தொற்று உற்தி ஆகி உள்ளது.
இந்த பார்ட்டி நடந்த கரண் ஜோகர் வீட்டுக்கு மும்பை மாநகராட்சி சீல் வைத்துள்ளது. இந்த பார்ட்டியில் கலந்துக் கொண்ட சிலர் அடுத்த சில நாட்களில் அனில்கபூரின் இளைய மகள் ரியா கபூர் நடத்திய பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இதில் பிரபலங்களான கரிஷ்மா, மசாப், மலாய்க்கா அரோரா கலந்து கொண்டதால் பாலிவுட் வட்டாரத்தில் கொரோனா இன்னும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]