திருச்சி: நைஜீரியாவிலிருந்து சென்னை வந்தவர் உட்பட 7 பேருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் அவர்களது சோதனை முடிவுகள் வந்தபிறகே உறுதியாக தெரியும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர் களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டில், ஒமிக்ரான் பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போது, நைஜீரியாவில் இருந்து வந்தவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.  அதில், ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்புக்கான வைரஸ் அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால்,  அவரது மாதிரி பெங்களூரு மரபணு பகுப்பாய்வு கூடத்திற்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்,  மொத்தம்  7 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், அவர்கள் அனைவரும்  சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

ஒமிக்ரான தொற்று தொடர்பான பகுப்பாய்பு பரிசோதனை இன்று இரவு அல்லது நாளை கிடைக்கும் என்று தெரிவித்த அமைச்சர் அதன்பிறகே, அவர்களுக்கு என்ன வகையான கொரோனா தொற்று என்பது  தெரிய வரும் என்றும் கூறினார்.