சென்னை
பிரபல நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடிகர் அர்ஜுன் தமிழ் திரையுலகில் ஆக்ஷன் கிங் என்னும் அடைமொழியுடன் விளங்கும் புகழ்பெற்ற நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது ஒரு தனியார் தொலைக்காட்சி சேனலில் ஒரு ரியாலிட்டி ஷோவையும் நடத்தி வருகிறார்.
அர்ஜுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel