டில்லி

த்திய அரசு தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு 2 விருதுகள் வழங்கி கவுரவித்துள்ளது.

தமிழக அரசு பல்வேறு துறைகளிலும் முதன்மை பெற்று வருகிறது.   இதைப் பலரும் பாராட்டிக் கவுரவித்து வருகின்றனர்.   அவ்வகையில் தமிழக அரசின் செயல்பாடுகளைப் பாராட்டி மத்திய அரசு 2 விருதுகள் வழங்கி உள்ளன.

அவற்றில் முதல் விருது தொற்றா நோய்களுக்கான பரிசோதனைக்காக வழங்கப்பட்டுள்ளது.  இந்திய அளவில் தமிழகம் 29.88 லட்சம் பரிசோதனை செய்து முதல் இடத்தில் உள்ளதால் இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.

அடுத்த விருது ஆரோக்கிய வாழ்வை மேம்படுத்தத் தமிழக அரசு நடத்திய அமர்வுகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.  அகில  இந்திய அளவில் தமிழகத்தில் 85,514 அமர்வுகள் நடந்து 3ஆம் இடத்தை பிடித்ததையொட்டி இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.