சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 72வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.
அவருக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா, சௌந்தர்யா, மருமகன் விசாகன், பேரன்கள் யாத்ரா, வேத் கிருஷ்ணா மற்றும் உறவினர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினார்.
நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருடன் எளிமையாக தனது வீட்டில் பிறந்தநாளை கொண்டாடிய ரஜினிகாந்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியிருக்கிறது.
— Rajinikanth (@rajinikanth) December 13, 2021
தனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கூறிய முக்கிய பிரமுகர்கள் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ரஜினிகாந்த்.