புதுடெல்லி:
மத்திய அரசின் தவறால் தான் நாகாலாந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, மத்திய அரசின் தவறால் இந்த சம்பவம் நடந்துள்ளது என்றும், நாங்கள் உயிரிழந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்தும், மத்திய அரசின் இழப்பீடு குறித்தும் கேட்க விரும்பினோம் என்றும், ஆனால் எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் மட்டும் பேசியதுடன், கடைசியாக ‘அரசு வருத்தம் தெரிவிக்கிறது’ என்றார்.
அதற்கு என்ன பொருள்? நீங்கள் தவறு செய்துவிட்டீர்கள் என்று தானே அர்த்தம்.” “உங்கள் உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது? உங்களுக்குத் தகவல் கொடுப்பவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அவர் (மத்திய உள்துறை அமைச்சர்) இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
நாங்கள் இவற்றைக் கேட்கத் தயாராக இருந்தோம், ஆனால் அவரது அறிக்கைக்குப் பிறகு சபை ஒத்திவைக்கப்பட்டது,” என்று கார்கே கூறினார்.
Patrikai.com official YouTube Channel