புதுடெல்லி:
நாகாலாந்து துப்பாக்கிச்சூட்டுக்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாகாலாந்தில் கிராமத்தினர் மீது பாதுகாப்புப் படையினர் தவறுதலாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பலர் பலியாகினர். ஆனால் எத்தனை பேர் இறந்தனர் என்ற விவரம் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் பலியானார்.
மான் மாவட்டம் ஒட்டிங் கிராமத்தில் நக்கல்கள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்துப் பாதுகாப்புப் படையினர் கடும் சோதனையில் மேற்கொண்டனர். இந்நேரத்தில் பணியிலிருந்த வீரர்களுக்கும் ஒரு கும்பலுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதில் பாதுகாப்புப் படையினர் தற்காப்புக்குச் சுட்டதில் பொதுமக்கள் சிலர் பலியாகினர். 13 பேர் இறந்ததாக உறுதி செய்யப்படாத தகவல் தெரிவிக்கிறது. பாதுகாப்புப் படை வீரர்களின் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது, சம்பவ இடத்திற்குக் கூடுதல் பாதுகாப்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்திற்குக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து. அவர் வெளியிட்டுள்ள நாகாலாந்து துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் பலியானது இதயத்தை நெருடுகிறது என்றும், இந்த நாட்டில் மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், பாதுகாப்புப் படையும் பாதுகாப்பாக இல்லை. உள்துறை என்னதான் செய்கிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.