செர்பியா நாட்டில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை விமர்சித்து ட்வீட் பதிவிட்டதாக செய்தி வெளியானது.

“பணவீக்கம் முந்தைய சாதனைகளை முறியடித்துள்ள நிலையில், எவ்வளவு காலம் அரசு அதிகாரிகளான நாங்கள் அமைதியாக இருப்போம் என்று எதிர்பார்க்கிறீர்கள்.

கடந்த மூன்று மாதமாக ஊதியம் பெறாமல் உங்களுக்காக வேலை செய்து கொண்டிருக்கும் எனக்கு இதை விட்டால் வேறு வழி தெரியவில்லை.

இது தான் புதிய பாகிஸ்தானா ?” என்று செர்பியாவுக்கான பாகிஸ்தான் தூதரக அதிகாரப்பூர்வ ட்விட்டரில் பதிவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்ட நேரத்தில் பதிவிடப்பட்ட பதிவுகள் தூதரக அதிகாரிகளால் பதியப்பட்டதல்ல என்று பாகிஸ்தான் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.