மும்பை:
ந்திய கிரிக்கெட் அணியின்  தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணம் தள்ளிவைக்க வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் நான்கு டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
ஒமைக்ரான்  கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்டது.  இதன் காரணமாக தென்னாப்பிரிக்காவில் இருந்து வருபவர்களுக்குப் பல புதிய கட்டுப்பாடுகளைப் பல நாடுகள் விதித்து உள்ளது.   இந்தியா “ஏ” அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.   பயோ பபுலின் மூலம் போட்டிகளை ஒரே மைதானத்தில் நடத்தலாம் என்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் திட்டம் போட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் நடைபெறுமா என்பதை வரும்  ஞாயிற்றுக்கிழமைக்குள் முடிவு செய்ய பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.   டிசம்பர் 17 முதல் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியுடன் தொடங்கும் இந்த தொடர், புதிய ஒமைக்ரான்  பரவியதிலிருந்தே கேள்விக்குறியாகவே உள்ளது.