சென்னை: அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக)  உட்கட்சி தேர்தல்  குறித்தும், அதற்கான விண்ணப்ப கட்டணம் குறித்தும்   அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிவித்து உள்ளனர்.

அதன்படி, கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் வரும் 7ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து டிசம்பர் 13ந்தேதி முதல் 23ந்தேதி வரை இரு கட்டங்களாக கிளைக்கழக தேர்தல் நடைபெறும் என  அதிமுக தலைமைக்ழகம் வெளியிட்டு உள்ளது.

அதில், அதிமுக சட்டவிதி-30ன் பிரிவு-2ன்படி, கழக அமைப்புகளின் பொதுத்தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்க ஒருமுறை நடத்திட வேண்டும் என்ற விதிமுறைக்கேற்ப தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி கழக ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் 7ந்தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வரும் 13ந்தேதி முதல் இரண்டு கட்டங்களாக கிளைக்கழகத் தேர்தல்கள் நடைபெறும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிவித்து உள்ளனர். தேர்தலில் போட்டியிடுவோர் செலுத்த வேண்டிய கட்டணம் குறித்தும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கிளைக்கழக நிர்வாகிகள், பேரூராட்சி வார்டு கழக நிர்வாகிகள், நகர வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி வட்டக்கழக நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான தேர்தல் வரும் 13ந்தேதி முதல் 23ந்தேதி வரை 2 கட்டங்களாக  நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்பமனு விண்ணப்பங்களை செலுத்தி, அதற்கான விண்ணப் படிவங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி

கிளைக்கழக நிர்வாகிகள் தேர்தலில், செயலாளர் பதவிக்கு ரூ.250 அவைத்தலைவர், இணைச்செயலாளர், துணைச்செயலாளர்கள், பொருளாளர், மேலமைப்பு பிரதிநிதிகள் பதவிக்கு கட்டணம் கிடையாது.

பேரூராட்சி வார்டு கழகச் செயலாளர் பதவிக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 300

பேரூராட்சி வார்டு  அவைத்தலைவர், இணைச்செயலாளர், துணைச்செயலாளர்கள், பொருளாளர், மேலமைப்பு பிரதிநிதிகள் பதவிக்கு விண்ணப்ப கட்டணம்  ரூ.200

நகர வார்டு செயலாளர் பதவிக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 500

அவைத்தலைவர், இணைச்செயலாளர், துணைச்செயலாளர்கள், பொருளாளர், மேலமைப்பு பிரதிநிதிகள் பதவிக்கு விண்ணப்ப கட்டணம்  ரூ.300

மாநகராட்சி வட்டக்கழகச் செயலாளர் பதவிக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.2000

அவைத்தலைவர், இணைச்செயலாளர், துணைச்செயலாளர்கள், பொருளாளர், மேலமைப்பு பிரதிநிதிகள் பதவிக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.700.