தென் ஆப்பிரிக்காவில் புதிதாக பரவி வரும் ‘ஒமிக்ரான்’ என்று பெயரிடப்பட்டுள்ள B.1.1.529 எனும் புதிய கொரோனா வைரஸ் காரணமாக மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதிச் சுற்றுப் போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வே தலைநகர் ஹராரே-வில் நடைபெற்று வரும் ஐ.சி.சி. மகளிர் உலகக் கோப்பைக்கான தகுதிப் போட்டிகளில் இலங்கை மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டி ரத்து செய்யப்பட்டது.
2022 ம் ஆண்டு நியூஸிலாந்து நாட்டில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை இறுதிச்சுற்று போட்டிகளில் விளையாட தகுதியுடைய மூன்று அணிகளை தேர்வு செய்யும் தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஹராரேவில் நடைபெற்று வந்தது.
ஒன்பது அணிகள் கலந்து கொண்ட போட்டிகள் ரத்து செய்யப்பட்டதால், இதுவரை விளையாடிய போட்டிகளில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில், பங்களாதேஷ், மேற்கு இந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று அணிகள் இறுதிச் சுற்றில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளன.