சென்னை: முன்னாள் துணைமுதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ்-க்கு ரூ.82 கோடி வரி செலுத்த  வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது.  அதற்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,  வருமான வரித்துறை நோட்டீசுக்கு தடை விதிக்க  மறுத்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில்வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில் கிடைத்த ஆவணங்களின்படி, முன்னாள் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமனா ஓ.பன்னீர்செல்வம் ரூ.82.12 கோடி ரூபாயும் வரியாக செலுத்த வேண்டும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதை எதிர்த்து,  ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டதுழ. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி,  நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரிக்கப்பட்டது. விசாரணையின்போது, நீதிபதிகள் வருமான வரித்துறையின் நோட்டீசுக்கு தடை விதிக்க மறுத்தததோடு, வருமான வரித்துறையின் மதிப்பீட்டு உத்தரவு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் இந்த வழக்கில் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என உத்தரவிட்டனர்.