இந்தூர்: மத்தியபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தனது மனைவி மீதான அன்பை வெளிப்படுத்தும் வகையில் மினி தாஜ்மகால் ஒன்றைக் கட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

மினி தாஜ்மஹால் உடன் ஆனந்த் சோக்சே தம்பதி

இந்தியாவின் காதல் சின்னமாக ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹால் விளங்குகிறது. உலக அதிசயங்களுல் ஒன்றாகவும்  திகழ்கிறது. இதுமட்டு மின்றி, காதலர்கள்  தங்களது காதலிகளுக்கு தங்களது காதலை வெளிப்படுத்தும் சின்னமாகவும் தாஜ்மஹால் திகழ்கிறது. அதுபோல, மத்திய பிரசா மாநிலத்தை சேர்ந்த ஆசிரியர்  ஆனந்த் சோக்சே என்பவர் தனது மனைவிமீதான காதலால், புர்கான்பூரில் மின தாஜ்மஹாலை கட்டி, தனது அன்பை வெளிப்படுத்தி உள்ளார்.

ஷாஜஹான் தனது மனைவி மும்தாஜ் மீதான காதலின் அடையாளமாக தாஜ் மஹாலை உருவாக்கியதுபோல், மத்தியப்பிரதேசத்தின் புர்ஹான் பூரைச் சேர்ந்த  ஆசிரியர் ஆனந்த் சோக்சே தனது மனைவிக்குப் பரிசு அளித்துள்ளார்.

இதுகுறித்து கூறிய ஆனந்த் சோக்சே,  தாஜ்மஹாலின் அழகின் மீது தனக்கு எப்போதும் பிரமிப்பு உண்டு.  தனது ஊரிலும் யாராவது தாஜ்மஹாலைப் போலவே ஒரு கட்டிடத்தைக் கட்டுவார்களா என்ற ஏக்கம் இருந்தது வந்தது. ஆனால், அது நிறைவேறாததால், தானே தாஜ்மஹால் போன்ற வடிவில ஒரு வீட்டை  கட்டலாமா என பல மாதங்களாக யோசித்து வந்தததாகவும், இறுதியில், தாஜ்மஹாலை கட்டி தனது  காதல் மனைவிக்கு பரிசளிக்க வேண்டும் என்று முடிவு செய்ததாகவும் தெரிவித்து உள்ளார்.

மினி தாஜ்மஹால் – அழகி உள்புறத் தோற்றம்

இதற்கான பணிகளை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிய ஆனந்த், சமீபத்தில்தான் மினி தாஜ்மஹாலின் கட்டடிப்பணிகள் முடிவடைந்தது என்றும், அதை தனது காதல் மனைவிக்கு பரிசாக வழங்கியதாகவும் கூறியுள்ளார்.

ஆனந்த் கட்டியுள்ள மினி தாஜ்மஹாலில், 4 படுக்கை அறைகள் உள்ளது. வெளியில் இருந்து பார்ப்பதறகு, இந்த வீடு அப்படியே அச்சு பிசகாமல் தாஜ்மஹாலை போலவே உள்ளது. இந்த வீட்டை உருவாக் ஆக்ரா மற்றும் ராஜஸ்தானில் இருந்து கைவினைஞர்களை கட்டிடத்தின் சுவர்களை அலங்கரிக்க அழைத்தது மட்டுமல்லாமல், 17 ஆம் நூற்றாண்டின் நினைவுச்சின்னத்தின் அதே பளிங்குக்கல்லையும் பயன்படுத்தினார். தளபாடங்களுக்காக, அவர் சூரத்தில் இருந்து கைவினைஞர்களை அழைத்ததாகவும் தெரிவித்து உள்ளார்.

இந்த மினி தாஜ்மஹாலை கட்டிய பொறியாளர் கூறும்போது,  தாஜ் மஹாலை போலவே  இந்த வீட்டைக் கட்ட கடும் சிரமம் எடுத்தாகவும்,  இதற்காக பெங்கால் மற்றும் இந்தூரில் உள்ள கலைஞர்களிடமும் உதவிகளைக் கேட்டு உருவாக்கியதாகவும் பெருமிதமாக கூறி உள்ளார்.

சுமார் 29 அடி உயரம் கொண்ட இந்த வீட்டின் மேற்புறத்தில்,  தாஜ்மஹாலின் கோபுரங்களைப் போலவே கோபுரங்களும் அமைக்கப்பட்டு உள்ளது. வீட்டின் தரையில் ராஜஸ்தானின் சலவை கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இருளிலும் ஜொலிக்கும் வகையில் வீட்டின் உள்ளே அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய  ஒரு பெரிய ஹால், கீழ் தளத்தில் இரண்டு படுக்கையறைகள், மேற்தளத்தில் இரண்டு படுக்கையறைகள், ஒரு நூலகம் மற்றும் ஒரு தியான அறை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இந்த மினி தாஜ்மஹால் முழுவதும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு, இருளிலும் தாஜ் மஹாலை போலவே ஜொலிக்கும் வகையிலான லைட்டிங் இந்த வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.