சென்னை:  தமிழகத்தில் இன்று மேலும் 741  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக கோவையில் 119  பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழ்நாடு சுகாதாரத்துறை இன்று இரவு 7 மணி வெளியிட்டுள்ள தகவலின்படி, மாநிலம் முழுவதும் இன்று 1,00,817 கொரோனா சோதனைகள் செய்யப்பட்டு உள்ளன. இதுவரை  5,35,60,440** சோதனைகள் செய்யப்பட்டு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 741 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 27,21,762 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி  13   பேர் பலியான நிலையில், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36,401 ஆக அதிகரித்துள்ளது.  இன்று மேலும்  808  பேர்  கொரோனா தொற்று சிகிச்சையில் இருந்து குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26,76,825  ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பில்  கோவை மீண்டும் முதலிடத்தில் தொடர்கிறது.  கோயமுத்தூரில் இன்று 119 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. 2வது இடத்தில் சென்னை உள்ளது. சென்னையில் 114 பேருக்கும், ஈரோட்டில் 78  பேருக்கும், செங்கல்பட்டில் 57  பேருக்கும் திருப்பூரில் 57  பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு:

தலைநகர் சென்னையில் இன்று 114  பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 5,57,320  ஆக உயர்ந்துள்ளது.  இன்று மேலும் 3பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 8598 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மேலும்  124 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 5,47,448 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1274 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்:

அரியலூர் 2
செங்கல்பட்டு 57
சென்னை 114
கோவை 119
கடலூர் 6
தருமபுரி 8
திண்டுக்கல் 1
ஈரோடு 78
கள்ளக்குறிச்சி 2
காஞ்சிபுரம் 17
கன்னியாகுமரி 9
கரூர் 18
கிருஷ்ணகிரி 5
மதுரை 6
மயிலாடுதுறை 2
நாகப்பட்டினம் 8
நாமக்கல் 43
நீலகிரி 16
பெரம்பலூர் 1
புதுக்கோட்டை 4
ராமநாதபுரம் 2
ராணிப்பேட்டை 4
சேலம் 39
சிவகங்கை 4
தென்காசி 1
தஞ்சாவூர் 20
தேனி 1
திருப்பத்தூர் 2
திருவள்ளூர் 25
திருவண்ணாமலை 5
திருவாரூர் 8
தூத்துக்குடி 0
திருநெல்வேலி 14
திருப்பூர் 57
திருச்சி 23
வேலூர் 15
விழுப்புரம் 3
விருதுநகர் 2