
ஸ்ரீவாரி பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பி ரங்கநாதன் தயாரித்துள்ள ஆனந்தம் விளையாடும் வீடு திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் நாயகனாக நடிக்க , ஷிவாத்மிகா கதாநாயகியாக நடிக்கிறார்.
இவர்களுடன் மௌனிகா, சரவணன், சினேகன், ஜாக்குலின், மைனா, சுஜிதா, சிங்கம் புலி, டேனியல் பாலாஜி, நமோ நாராயணன், சௌந்தர்ராஜன், நக்கலைட்ஸ் தனம் உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளது. இயக்குனர் சேரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
விரைவில் ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் ட்ரைலர் மற்றும் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் முதல் பாடலாக சொந்தமுள்ள வாழ்க்கையில எனும் அழகான பாடல் வெளியானது.
Patrikai.com official YouTube Channel