சென்னை:
சுரங்கப்பாதைகளில் நீர் தேங்காத வகையில் திட்டம் வகுக்கப்படும் என்று   அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னையில் அண்மையில் பெய்த தொடர் கனமழையால் தண்ணீர் தேங்கியதால்  வியாசர்பாடி, கணேசபுரம், கெங்கு ரெட்டி, அஜாக்ஸ், மேட்லி, துரைசாமி பழவந்தாங்கல், தாம்பரம், அரங்கநாதன்,காக்கன், வில்லிவாக்கம் உள்ளிட்ட 11 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டன.
இந்நிலையில், சுரங்கப்பாதைகளில் நீர் தேங்காத வகையில் திட்டம் வகுக்கப்படும் என்று   அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இனிவரும் காலங்களில் சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்காத வகையில் திட்டம் வகுக்கப்படும் என்றும். நிதிச்சுமை இருந்தாலும் சென்னையை ஒளிரச் செய்ய முதல்வர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்றும் கூறினார்.