உலக அளவில் புகழ்பெற்ற சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி தமிழில் சன் தொலைக்காட்சியில் ஆரம்பமானது.
ஒவ்வொரு வார இறுதியிலும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். செஃப் ஆர்த்தி சம்பத், செஃப் கௌஷிக் ஷங்கர் மற்றும் செஃப் ஹரிஷ் ராவ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் நடுவர்களாக விளங்கினர்.
மாஸ்டர் செஃப் தமிழ் முதல் சீசனில் திண்டுக்கல்லைச் சேர்ந்த தேவகி விஜயராமன் டைட்டிலை தட்டிச்சென்றதோடு 25 லட்ச ரூபாய் பரிசையும் Golden Chef Coat-ம் வென்றார்.
இந்நிலையில் மாஸ்டர் செஃப் தமிழ் முதல் சீசனின் வெற்றியைத் தொடர்ந்து 2வது சீசன் விரைவில் ஆரம்பமாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளன.
https://www.instagram.com/p/CWaGMTqhj7e/