சென்னை: பொது இடங்களில் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டு உள்ளது.

தொற்று பரவலை தடுக்க கொரோனா தடுப்பூசி ஒன்றே தீர்வாக கூறப்படும் நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மக்கள் கூடும் இடங்களில் தடுப்பூசி செலுத்தியது குறித்து அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும், திரையரங்குகள், இதர பொழுதுபோக்கு இடங்கள், விளையாட்டு மைதானங்களில் உறுதி செய்ய வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை  தெரிவித்துள்ளது.

தடுப்பூசி செலுத்தியுள்ளனரா என்பதை பள்ளி, கல்லூரி, கடைகள், சந்தைகள், தெருக்களில் உறுதி செய்யவும்,  சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், கடை ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

 

[youtube-feed feed=1]