இந்தியா மற்றும் அரபு நாடுகளில் பிரபலமானவர் இந்தி பாடகர் அர்ஜித் சிங்.

கொரோனா பரவலுக்குப் பிறகு அரபு நாடுகளில் நடைபெறும் முதல் கலை நிகழ்ச்சி இது என்பதால் சமூக இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அபுதாபி யாஷ் தீவில் உள்ள எதியாட் அரினா எனும் பிரம்மாண்ட உள்ளரங்கத்தில் நடைபெறும் இந்த இசைநிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத்தீர்ந்து விட்டது.

ஐந்து ஆண்டுகளுக்குப் பின் மத்திய கிழக்கு ஆசியாவில் உள்ள மிகப்பெரிய உள்ளரங்கத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் வரவேற்பு அதிகரித்துள்ளது.

இன்று இரவு நடைபெற இருக்கும் இந்த இசை நிகழ்ச்சியை அபுதாபியின் காலாச்சார மற்றும் சுற்றுலாத் துறையுடன் இணைந்து போர்ட்போலியோ மேனேஜ்மென்ட் ஈவென்ட் (Portfolio Managing Events PME) என்ற நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில், பி.எம்.இ. ப்ரோடோகால் (PME PROTOCOL) எனப்படும் கிரிப்டோகரன்சியை இந்நிறுவனம் அறிமுகம் செய்கிறது. பொழுதுபோக்கு துறையில் அறிமுகப்படுத்தப்படும் உலகின் முதல் மெய்நிகர் நாணயம் இது என்பது குறிப்பிடத்தக்கது.