சென்னை:
னமழை காரணமாக 8 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு திசையில் நகர்ந்து நாளை தெற்கு ஆந்திரா- வட தமிழகம் கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்பதால் இன்று சென்னை திருவல்லிக்கேணி,அண்ணா சாலை, மயிலாப்பூர், பட்டினம் பாக்கம்,தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, தி. நகர், நுங்கம்பாக்கம், சூளைமேடு, அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. நாளை கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வட தமிழக கடற்கரையோரம் நகரக்கூடுவதால் அதி கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மேலும் சென்னைக்கு ரெட் அலர்டும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்  நாளை  மழையின் காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதேபோல் கனமழையின் காரணமாகத் திருநெல்வேலி மாவட்டத்தில்  உள்ள  பள்ளிகளிலுக்கு மட்டும்  நாளை ஒரு நாள்  விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல்  கனமழை எச்சரிக்கை காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது அதனடிப்படையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.