கொரோனா பரவல் நேரத்தில் நியமிக்கப்பட்ட சுகாதாரத் துறை முன் களப்பணியாளர்கள் தங்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியத்தை உயர்த்தி தருமாறு தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
கடந்த ஆண்டு கொரோனா பரவல் நேரத்தில் நியமிக்கப்பட்ட முன் களப்பணியாளர்கள் ஓய்வின்றி பணியாற்றி வந்த நிலையில் தமிழகத்தில் நடந்த தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்ற தி.மு.க. அரசு, முந்தைய ஆட்சியில் நியமிக்கப்பட்ட முன் களப்பணியாளர்களை நீக்காமல் தொடர்ந்து பணியில் இருக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் முதல் மக்களைத் தேடி மருத்துவம் என்ற பெயரில், வீடுவீடாகச் சென்று மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள இந்த தற்காலிக முன் களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
https://twitter.com/tvijay940/status/1460608588884307972
ஓராண்டுக்கும் மேலாக மாதம் ரூ. 4000 தொகுப்பூதியம் பெரும் இவர்கள் தங்களது சமபளத்தை உயர்த்தி தருமாறும், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.