16/11/2021 8.30 PM: சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று 789 பேருக்கு கொரோனா பாதிப்பு 15 பேர் உயிரிழப்பு…

Must read

சென்னை:  தமிழகத்தில் இன்று மேலும் 789  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் 120 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த 24மணி நேரத்தில்  ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை இன்று இரவு 8.30 மணி அளவில்  தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி  மாநிலம் முழுவதும் இன்று 1,03,202  கொரோனா சோதனைகள் செய்யப்பட்டு உள்ளன.  இதுவரை 5,28,50,459 சோதனைகள் செய்யப்பட்டு உள்ளது.

கடந்த 24மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் புதிதாக மேலும்  789 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 27,16,421 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி 15  பேர் பலியான நிலையில், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36,311 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மேலும்  913 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26,70,761  ஆக உயர்ந்துள்ளது.

தற்போது மாநிலம் முழுவதும் 9,349 பேர் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று பாதிப்பில்  சென்னை மீண்டும் முதலிடத்தில் உள்ளது. சென்னையில் இன்று 120 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், கோவையில் 118 பேருக்கும், ஈரோட்டில் 75 பேருக்கும், செங்கல்பட்டில் 63 பேருக்கும் திருப்பூரில் 47 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு:

தலைநகர் சென்னையில் இன்று 120  பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 5,56,527 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் 2 பேர் பலியாகி உள்ளதுடன் மொத்த உயிரிழப்பு 8550 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 102 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலமை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,46,677.  தற்போது சென்னையில் மட்டும்  1270 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்புமாவட்டம் வாரியாக விவரம்:

அரியலூர் 2
செங்கல்பட்டு 63
சென்னை 120
கோவை 118
கடலூர் 11
தருமபுரி 16
திண்டுக்கல் 7
ஈரோடு 75
கள்ளக்குறிச்சி 8
காஞ்சிபுரம் 17
கன்னியாகுமரி 17
கரூர் 14
கிருஷ்ணகிரி 5
மதுரை 15
மயிலாடுதுறை 5
நாகப்பட்டினம் 7
நாமக்கல் 32
நீலகிரி 20
பெரம்பலூர் 0
புதுக்கோட்டை 8
ராமநாதபுரம் 1
ராணிப்பேட்டை 3
சேலம் 38
சிவகங்கை 6
தென்காசி 0
தஞ்சாவூர் 26
தேனி 3
திருப்பத்தூர் 1
திருவள்ளூர் 21
திருவண்ணாமலை 7
திருவாரூர் 16
தூத்துக்குடி 5
திருநெல்வேலி 7
திருப்பூர் 47
திருச்சி 36
வேலூர் 8
விழுப்புரம் 1
விருதுநகர் 3

 

More articles

Latest article