டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 8,865 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இது கடந்த 287 நாட்களில் மிகக் குறைவு. அதே வேளையில், இன்றைய பாதிப்பில் 4547 பேர் கேரளாவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதாவது 50 சதவிகித பாதிப்பு கேரளா மாநிலத்தில் மட்டுமே பதிவாகி உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 9 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு தகவலை வெளியிட்டு உள்ளது. அதன்படி கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக மேலும் 8,865 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,44,56,401ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேர பாதிப்பில் 50 சதவகித பாதிப்பு கேரளாவில் மட்டுமே பதிவாகி உள்ளது.
நேற்று மேலும் 197 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். கேரளாவில் மட்டும் 57 பேர் பலியாகி உள்ளனர். இதன்மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 463852ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.35% ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தொற்றில் இருந்து 11971 பேர் குணமடைந்துள்ளனர். இதில் கேரளாவில் மட்டும் 6866 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 33861756ஆக உயர்ந்துள்ளது. கொரோனவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98.27% ஆக உள்ளது.
தற்போது இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 130793 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்தியா முழுவதுழம் நேற்று 59,75,469 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதுவரை 1,12,97,84,045 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நேற்று 11,07,617 சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன. இதுவரை 62,57,74,159* சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது.