சென்னை: கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளதால், செமஸ்டர் தேர்வுகள் நேரடி எழுத்து தேர்வாக நடைபெறும் என பெரும்பாலான கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அறிவித்துள்ள நிலையில், நாங்கள் எழுத்து தேர்வை எழுத மாட்டோம், ஆன்லைன் தேர்வுதான் நடத்த வேண்டும் என மதுரை மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணாக்கர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகினறனர். இதையடுத்து, செமஸ்டர் தேர்வு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி அறிவிக்கப்பட்ட நிலையில் தொற்று பரவல் சற்றே குறையத் தொடங்கியதும், ஆன்லைன் மூலமே கல்வி கற்பிக்கப்பட்டு, ஆன்லைன் வழியாகவே தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் ஆன்லைன் கல்வியால், மாணாக்கர்களின் சந்தேகம் தீர்க்கப்பட முடியவில்லை என்றும்,மனதளவிலும் உடலளவிலும் மாணாக்கர்கள் பாதிக்கப்படுவதாகவும், கிராமப்புறங்களில் இணையதள வசதி மற்றும் ஸ்மார்ட் போன் வசதிகள் முழுமையாக இல்லாத நிலையும் ஏற்பட்டது. இதனால் ஒரு தரப்பினர் ஆன்லைன் தேர்வு, ஆன்லைன் கல்விக்கு எதிர்ப்பு வந்தனர்.
ஆனால், மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்களோ, ஆன்லைன் தேர்வுதான் வேண்டும், எழுத்து தேர்வு வேண்டாம் என போர்க்கொடி தூக்கி உள்ளனர். பாடத்தை மட்டும் ஆன்லைனில் நடத்தி விட்டுத் தேர்வுகளை மட்டும் நேரடியாக எழுதச் சொல்கிறார்கள் என கொந்தளித்துள்ளனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் சுமார் 600க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் குதித்துள்ளனர். நேரடி தேர்வுகளை எழுத முடியாது கல்லூரி முன்பாக கோஷமிட்டபடி மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் ஊர்வலமாக சென்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டம் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக மாவட்ட ஆட்சியர் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. காவல்துறை யினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இதனையடுத்து மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து அமெரிக்கன் கல்லூரி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. அதையடுத்து, “நேரடி தேர்வுகளை 2 வாரங்களுக்கு ஒத்தி வைப்பதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆன்லைனில் தேர்வு கிடையாது, எழுத்து தேர்வாகவே நடைபெறும்! அண்ணா பல்கலைக்கழகம்…