சென்னை
தமிழகத்தில் நவம்பர் 30 வரை கொரோனா ஊரடங்கை நீட்டித்து முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா இரண்டாம் அலை பரவலால் தமிழகம் கடும் பாதிப்பு கடும் பாதிப்பு அடைந்ததால் தமிழகத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பிறகு கொரோனா பரவல் குறைந்ததால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளை அதாவது நவம்பர் 15 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இந்த கொரோனா ஊரடங்கை மேலும் 15 நாட்களுக்கு அதாவது நவம்பர் 30 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். இதன்படி ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் வரும் நவம்பர் 30 வரை தொடர உள்ளது. தற்போது டெங்கு மற்றும் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கூறி உள்ளார்.
இந்த ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக வெளியில் செல்லும் பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தவிரக் கடைகளில் பணி புரிவோர் எந்நேரமும் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும் தனி மனித இடைவெளியை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் முதல்வர் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.