ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர் பீட்டர் ஜாக்சன் பிரதான பங்குதாரராக இருக்கும் வீட்டா டிஜிட்டல் நிறுவனம் 1.625 பில்லியன் டாலர்களுக்கு விற்கப்படுகிறது.

வீட்டா டிஜிட்டல் நியூசிலாந்தை மையமாக கொண்டு இயங்கி வந்த நிறுவனம். ஹாலிவுட்டில் தயாரான பீட்டர் ஜாக்சன் இயக்கிய லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் படத்தின் ஸிஜி வேலைகளை கவனித்தது இந்நிறுவனம்தான்.

இந்த நிறுவனத்தை வீடியோ கேம் சாப்ட்வேர்கள் தயாரிக்கும் யூனிட்டி என்ற நிறுவனம் வாங்குகிறது. வீட்டாவின் விஷுவல் எபெக்ட் பிரிவு, வீட்டாஎஃப்எக்ஸ் என்ற பெயரில் தனியாக இயங்கும். யூனிட்டியின் முக்கிய கஸ்டமாராக இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

[youtube-feed feed=1]