விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ராஜா ராணி 2 சீரியல் மூலம் மிகச் சிறந்த சின்னத்திரை நடிகையாக வலம் வரும் விஜே அர்ச்சனா குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்ஜினியரிங் படித்த அர்ச்சனாவிற்கு சினிமா மீது ஆசை. அதிலும் ஆங்கராக வேண்டும் என்பதையே லட்சியம், டிக்டாக் மூலம் ஈஸியாக சோஷியல் மீடியாவில் வைரல் ஆனார்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி முதன்முறையாக ஆதித்யா காமெடி தொலைக்காட்சியில், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

அவ்வப்போது பிரைடல் ஷூட் ஃபோட்டோக்களையும் வெளியிடுவார். சமீபத்தில் வெயிட் லாஸ்ஸூம் செய்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக அர்ச்சனா குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சீரியலில் நடிக்க தொடங்கிய பின்பு பல் சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்ததாக தகவல்கள் பரவி வருகின்றன. சிகிச்சைக்கு முன்பு பின், என அர்ச்சனாவின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.