கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களின் மனம் கவர்ந்த டான்ஸ் ரியால்டி நிகழ்ச்சியான டான்ஸ் vs டான்ஸ் சீசன் 2, இந்த வார இறுதி நாட்களில் தமிழ் திரைப்பட தொழில் துறையைச் சேர்ந்த புகழ்பெற்ற நடன இயக்குநர்களை கொண்டாடி கௌரவிக்கவுள்ளது.

நவம்பர் 13 சனிக்கிழமை மற்றும் 14 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 7:30 மணிக்கு உங்கள் கண்களுக்கு விருந்து படைக்க டான்ஸ் vs டான்ஸ் சீசன் 2-ஐ உங்கள் கலர்ஸ் தமிழ் ஒளிபரப்புகிறது.

டான்ஸ் vs டான்ஸ் சீசன் 2-ன் இந்த வார எபிசோடில் போட்டியாளர்கள் உடன் இனைந்து நடன இயக்குநர் ஸ்ரீதர், பெரும் பாராட்டுகளையும் புகழ்களையும் பெற்று திரைப்படத்துறையில் தனக்கென தனி அங்கீகரத்தை வைத்திருக்கும் பிரபல நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டருக்கு பாத பூஜை செய்து தங்களின் அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தி கௌரவிக்க உள்ளனர்.