சென்னை:
மழை வெள்ளம் குறித்த தவறான தகவல்களைப் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு காவல் துறை விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் தற்போது பெய்த வரும் கனமழையால் பல இடங்களில் மழை நீர் தேங்கி வெள்ளம் போன்று காட்சி அளிக்கிறது.
இந்நிலையில், பழைய வெள்ள நிகழ்வுகளின் காணொளிகளை தற்போது நடந்ததாகச் சித்தரித்து சிலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறனர்.
இதுபோன்ற பழைய வெள்ள நிகழ்வுகளின் காணொளிகளை தற்போது நடந்ததாகச் சித்தரித்துப் பகிர்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதுபோன்ற செயல்களைச் செய்பவர்களின் சமூகவலைத்தள கணக்குகள் முடக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel