பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூன்று வாரங்களை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:00 மணிக்கும் சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 9:30 மணிக்கும் ஒளிபரப்பாகிற பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இம்முறையும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர்.

1. மதுமிதா (ஆடை வடிவமைப்பாளர்)
2. இசைவாணி (கானா பாடகி)
3. அபிஷேக் (விமர்சகர்)
4. ராஜு ஜெயமோகன் (சீரியல் நடிகர்)
5. பிரியங்கா தேஷ்பாண்டே (தொகுப்பாளினி)
6. அபினய் வட்டி (நடிகர்)
7. சின்னப்பொண்ணு (நாட்டுப்புற பாடகி)
8. பவானி ரெட்டி (சீரியல் நடிகை)
9. நாடியா சாங் (மலேஷியாவை சேர்ந்த மாடல் அழகி)
10. இமான் அண்ணாச்சி (நகைச்சுவை நடிகர்)
11. வருண் (நடிகர்)
12. ஐக்கி பெரி (ராப் பாடகி)
13. அக்‌ஷரா ரெட்டி (மாடல் அழகி)
14. நிரூப் நந்தகுமார் (நடிகர்)
15. நமீதா மாரிமுத்து (மாடல் அழகி)
16. சிபி சந்திரன் (மாஸ்டர் பட நடிகர்)
17. சுருதி ஜெயதேவன் (மாடல் அழகி)
18. தாமரைச் செல்வி (நாடக கலைஞர்)

இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர். இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா , சின்னப்பொண்ணு அடுத்தடுத்த வாரங்களில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட, இந்த வாரம் சேலத்து பெண் சுருதி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

இந்த வாரம் வானம் ஆற்றலுக்கான சக்தி. இந்த வாரம் முழுக்க பாவனிக்கு லிவ்விங் ஏரியாவில் முன்னுரிமை அளிக்கப்படும். உதவியாளராக தாமரையை தேர்வு செய்தார் பாவனி.

’பொம்மலாட்டம்’ டாஸ்கில் பரிதாப ஓட்டு பெற்று அபிநவ் இந்த வார தலைவரானார். ஆனால் இசை, நாணயத்தின் சக்தியை பயன்படுத்தி இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவரானார்.

முதல் ப்ரோமோவில், நிரூப்பிற்கும் பாவனிக்கும் பயங்கர வாக்குவாதம் ஏற்படுகிறது. ’நிரூப் ரூல்ஸை பிரேக் பண்ற வரைக்கும் நான் இந்த காயினை வைக்க மாட்டேன். நீங்க பண்ணது ரொம்ப தப்பு’ என்கிறார் பாவனி. அதற்கு ‘உன் ஒருத்தனால நாங்க எல்லாரும் கஷ்டப்படணுமா?’ என ப்ரியங்கா கேட்க, ‘தண்டனை தர போறாங்கன்னு தெரிஞ்சு போச்சு, அப்போ நான் ஏன் கேக்கணும்?’ என்கிறார் நிரூப். ’நான் ஏன் பண்ணனும்ன்னா, அப்போ நாங்களும் இதையே செஞ்சிருக்கலாமே’ என கோபமாகிறார் பிரியங்கா.

இரண்டாவது ப்ரோமோவில், பிக் சீசன் 5ன் அவார்ட்ஸ் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் சிறந்த பிளேயர் அவார்டு நிரூபிற்கு வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து அக்ஷராவிற்கும் ஒரு அவார்டு வழங்கப்படும் நிலையில், ராஜுவிற்கு “நீ புடுங்குறது எல்லாமே தேவையில்லாத ஆணி தான்” என்ற அவார்ட் வழங்கப்படுகிறது.

மூன்றாவது ப்ரோமோவில் ஐக்கி, நிரூப்பை வெற்றி பெற வைத்துவிடுகிறார் என்பதால் பிரியங்கா – நிரூப் இடையே வாக்குவாதம் நடக்கிறது.