அஸ்வின் நாயகனாக அறிமுகமாகும் படத்துக்கு ‘என்ன சொல்ல போகிறாய்’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. இந்த படத்தை ஹரிஹரன் இயக்கவுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்துள்ள குக் வித் கோமாளி 2′ போட்டியாளராகக் கலந்துகொண்டு பிரபலமானவர் அஸ்வின்.

ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் அஸ்வினுக்கு நாயகியாக தேஜ் அஸ்வினி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரவேற்பை பெற்ற நிலையில் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்த டீசர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது .