சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிறது தனுஷின் ‘மாறன்’ .

க்ரைம் திரில்லரான இந்த படத்தில் தனுஷ் பத்திரிகையாளர் ரோலில் நடிக்கிறார். இப்படத்தில் மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்கிறார். இதில் மகேந்திரன் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிப்பது போல் தெரிகிறது. சமுத்திரகனி, ஸ்மிருதி வெங்கட், இயக்குநர் அமீர் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்துக்குக் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனத்துக்கான பொறுப்பைப் பாடலாசிரியர் விவேக் ஏற்றுள்ளார். இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில், மாறன் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ள ஜீவி பிரகாஷ் குமார், “மாறன் திரைப்படத்தின் இசை பணிகள் இறுதிக் கட்டத்தில் இருக்கின்றன… நான்கு பாடல்களும் ஒரு மாறன் தீம் பாடலும் அடங்கிய மாறன் படத்தின் இசை விரைவில் வெளியாகும்” என அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.