நடிகை ப்ரியங்கா சோப்ரா நியூயார்க்கில் சொந்தமாக ரெஸ்டாரண்ட் ஒன்றை தொடங்கியுள்ளார்.

2018 ஆம் ஆண்டு யுஎஸ் பாப் பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்டார். அத்தோடு அவர் ஒரு அமெரிக்கப் பிரஜையாகவே மாறினார். யுஎஸ்ஸில் பல கோடிகள் மதிப்பில் பிரமாண்ட வீடு ஒன்றையும் வாங்கினார்.

நடிகை பிரியங்கா சோப்ரா தீபாவளியை முன்னிட்டு சில படங்களைப் பகிர்ந்துள்ளார்.

அந்தப் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட பிரியங்கா, “எங்கள் முதல் வீட்டில் நாங்கள் ஒன்றாக இணைந்து கொண்டாடும் முதல் தீபாவளி. இது எப்போதும் சிறப்பானதாக இருக்கும். இந்த மாலை நேரம் மிகவும் சிறப்பாக அமைய உழைத்த அனைவருக்கும் நன்றி. நீங்கள் என் தேவதைகள். ஆடை அணிவது மட்டுமல்லாமல், இரவு முழுவதும் நடனமாடுவதன் மூலம், நான் வீட்டிற்கு திரும்பி வந்ததைப் போன்ற உணர்வை எனக்கு ஏற்படுத்தி, எங்கள் வீட்டையும் எனது கலாச்சாரத்தையும் கௌரவித்த அனைவருக்கும் நன்றி. என் இதயம் மிகவும் நன்றியுடன் நிரம்பியதாக இருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.

https://www.instagram.com/p/CV6vmCPNZvQ/