பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூன்று வாரங்களை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:00 மணிக்கும் சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 9:30 மணிக்கும் ஒளிபரப்பாகிற பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இம்முறையும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர்.

1. மதுமிதா (ஆடை வடிவமைப்பாளர்)
2. இசைவாணி (கானா பாடகி)
3. அபிஷேக் (விமர்சகர்)
4. ராஜு ஜெயமோகன் (சீரியல் நடிகர்)
5. பிரியங்கா தேஷ்பாண்டே (தொகுப்பாளினி)
6. அபினய் வட்டி (நடிகர்)
7. சின்னப்பொண்ணு (நாட்டுப்புற பாடகி)
8. பவானி ரெட்டி (சீரியல் நடிகை)
9. நாடியா சாங் (மலேஷியாவை சேர்ந்த மாடல் அழகி)
10. இமான் அண்ணாச்சி (நகைச்சுவை நடிகர்)
11. வருண் (நடிகர்)
12. ஐக்கி பெரி (ராப் பாடகி)
13. அக்‌ஷரா ரெட்டி (மாடல் அழகி)
14. நிரூப் நந்தகுமார் (நடிகர்)
15. நமீதா மாரிமுத்து (மாடல் அழகி)
16. சிபி சந்திரன் (மாஸ்டர் பட நடிகர்)
17. சுருதி ஜெயதேவன் (மாடல் அழகி)
18. தாமரைச் செல்வி (நாடக கலைஞர்)

இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர். இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா இருவரும் அடுத்தடுத்த இரண்டு வாரங்களில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட, பாடகி சின்னப்பொண்ணு கடந்த ஞாயிற்றுக் கிழமை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

இந்த வாரம் சேலத்து பெண் சுருதி வெளியேறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் ப்ரோமோவில், போட்டியாளர்கள் அனைவரும் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் கமல் ஹாசனுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவிக்கின்றனர். அப்போது ’சோறு இருந்தா கொஞ்சம் அனுப்புங்க சார், கொஞ்சம்ன்னா கொஞ்சம் இல்லைங்க சார், நாங்க மொத்தம் 16 பேர்’ என்ற படி பாடல் ஒன்றை பாடுகிறார்கள்.

இரண்டாவது ப்ரோமோவில் சிபி, மதுமிதா, ஐக்கி பெர்ரி ஆகியோர் எலிமினேஷனில் இருந்து காப்பாற்றப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதையடுத்து இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மூன்றாவது ப்ரோமோவில் யார் வெளியேற போகிறார் என சொல்ல தயாரான கமல் .