‘கூழாங்கல்’ திரைப்படம் கோவாவில் வரும் 20 தேதி நடைபெறவுள்ள சர்வதேச திரைப்படவிழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. இப்படத்தை போலவே இயக்குனர் ஜெயச்சந்திரன் ஹாஸ்மி இயக்கத்தில் வெளியான ‘ஸ்வீட் பிரியாணி’ குறும்படமும் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.

இயக்குனர் ஜெயச்சந்திரன் ஹாஸ்மி இயக்கிருந்த டூ லேட் குறும்படமும் பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளது.

உணவு டெலிவரி செய்பவரின் ஒரு நாளை மையமாக வைத்து ‘ஸ்வீட் பிரியாணி’ குறும்படம் எடுக்கப்பட்டது. இப்படம் வெளியாகி பலரின் பாராட்டுகளை பெற்றதோடு பல விருதுகளையும் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.