சென்னை: வங்கக் கடல் மேலடுக்கு சுழற்சியால் இன்றுமுதல் மேலும் 5நாட்கள் 10மாவட்டங் களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
அடுத்த இரண்டு வாரங்களில் தெற்கு மற்றும் உள்தமிழ்நாட்டில் இயல்பைவிட கூடுதலாக மழை பெய்யக்கூடும் என்றும் வட கடலோர பகுதி, உள் மாவட்டம் மற்றும் தென் மாவட்டங்களில் இயல்பை விட அதிக மழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மேலும் மழை கொட்டி வருகிறது. இந்த நிலையில், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலையில் கனமழைக்கு வாய்ப்பு. மேலும் கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யக் கூடும் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், வருகிற 7ஆம் தேதி முதல் மூன்று தினங்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வங்கக்கடலில் நவம்பர் 9 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.