நடிகர் ஜெய் நடிப்பில் பார்ட்டி, சிவ சிவா மற்றும் எண்ணித்துணிக ஆகிய படங்கள் முடிந்து இன்னும் ரிலீஸ் ஆகாமல் உள்ளன.

இந்நிலையில் அவர் நடிப்பில் அடுத்து நடிக்கும் பிரேக்கிங் நியூஸ் என்ற திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரேக்கிங் நியூஸ் படத்தில் அவர் சூப்பர் ஹீரோவாக நடிப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

பிரேக்கிங் நியூஸை ஆன்ட்ரூ பாண்டியன் என்பவர் இயக்கியுள்ளார். ஜானி லால், வில்லியம்ஸ் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்கள்;. ஜான் பீட்டர் இசையமைக்கிறார். ராகுல் பிலிம்ஸ் திருக்கடல் உதயம் படத்தை தயாரித்துள்ளார்.