பிரபல இந்தி நடிகர் அனுபம் கெர் இளம் பெண் ஒருவருடன் உரையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை அவரே தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

காத்மண்டு பகுதியில் அனுபம் கெர் ஒரு இளம் பெண்ணை பார்த்திருக்கிறார். அந்த இளம் பெண்அவரிடம் ஆங்கிலத்தில் பேசுகிறார். தன் கனவை நிறைவேற்ற முடியுமா என்று கோரிக்கை வைக்கிறார்.

“நான் பிச்சை எடுக்கிறேன். நான் பள்ளிக்கு செல்வதில்லை. பிச்சை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக நான் ஆங்கிலம் கற்றுக் கொண்டேன். என்னுடைய ஆங்கிலம் எப்படி இருக்கிறது?” என்று அவரிடமே கேட்கிறார்.

மேலும் தான் ஏழை குடும்பத்தில் இருந்து வருவதால் பிச்சை எடுப்பதாகவும் வேறு வழி இல்லை என்றும் ஆர்த்தி ஆங்கிலத்தில் அவரிடம் கூறுகிறார்.

https://www.instagram.com/p/CVvSj40lOvp/