நவம்பர் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது துல்கர் சல்மானின் குருப் திரைப்படம்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியிருக்கும் குருப் திரைப்படத்தை ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கியுள்ளார்.மேலும் துல்கருடன் இணைந்து டொவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாரன், சன்னி வெய்ன், ஷைன் டாம் சாக்கோ, ஷபீடா துள்ளிபலா, சுரபி லக்ஷ்மி மற்றும் பரத் சீனிவாசன் ஆகியோர் நடித்துள்ளனர்.

நிமிஷ் ரவி ஒளிப்பதிவில் சுசின் ஷ்யாம் இசையமைத்துள்ள குருப் திரைப்படத்தை வேஃபெரர் பிலிம்ஸ் சார்பில் நடிகர் துல்கர் சல்மான் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் துல்கர் சல்மானின் குருப் திரைப்படத்தின் விறுவிறுப்பான ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.