பரசுராம் பெட்லா இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துவரும் படம் ‘சர்காரு வாரி பாட்டா’. இதில் நாயகியாக கீர்த்தி சுரேஷ்

இதுவரை படத்தின் டீஸர் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி ‘சர்காரு வாரி பாட்டா’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அந்த வாரத்தில் ‘ஆர்.ஆர்.ஆர்’, ‘பீம்லா நாயக்’, ‘ராதே ஷ்யாம்’ உள்ளிட்ட படங்களும் வெளியாகவுள்ளன.

தற்போது ‘சர்காரு வாரி பாட்டா’ படத்தின் புதிய வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. ஏப்ரல் 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.