’அவன் இவன்’ படத்துக்குப் பிறகு விஷால், ஆர்யா இணைந்து நடித்து வரும் படம், எனிமி. மினி ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.வினோத் குமார் படத்தை தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்தநிலையில் எனிமி படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்தது.

இந்த நிலையில் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற எனிமி திரைப்பட பிரீவியூ ஷோவில் கலந்து கொண்ட நடிகர் விஷால் இன்று மாலை திருப்பதிக்கு சென்றார். திருப்பதியிலிருந்து நடைபாதை வழியாக பாதயாத்திரையாக புறப்பட்டு சென்ற அவர் இரவு திருமலையை அடைந்தார். திருமலையில் இரவு தங்கிய நடிகர் விஷால் நாளை காலை ஏழுமலையானை வழிபடுகிறார்.

அப்போது நடிகை ரோஜாவையும் சந்தித்துள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.