காலையில் தான் இந்த போஸ்டர் வெளியானது. கௌதம் மேனன் துப்பாக்கியுடன் இருக்க, வினோத் குமார் படத்தை இயக்குவதாகவும் செவன்டி எம்எம் ஸ்டுடியோஸ் மகேஷ் படத்தை தயாரிப்பதாகவும் அந்தப் போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது வெளியான சில மணி நேரங்களில் கௌதம் மேனன் இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
கௌதம் மேனனம் நடிக்கும் அன்புசெல்வன் என ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இணையத்தில் வேகமாக வைரலாகியது. இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் பலர் கௌதம் மேனனுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் பா.ரஞ்சித்தின் ட்விட்டர் பதிவை பகிர்ந்த கௌதம் மேனன் இந்த படத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஃபர்ஸ்ட்லுக் மூலம் தயாரிப்பாளருக்கு மிகப் பெரிய பெயர் கிடைத்துள்ளது. இதுப்போன்ற செயலை மிக எளிதாக செய்வது எனக்கு அதிர்ச்சியாகவும் பயமுறுத்த கூடியதாகவும் உள்ளது“ என்றுள்ளார்.
This is shocking & news to me.I have no idea what this film is that I’m supposed to be acting in.I don’t know or haven’t met the director whose name is on this poster.Producer has got big names to tweet this. It’s shocking & scary that something like this can be done so easily. https://t.co/CnMaB3Qo90
— Gauthamvasudevmenon (@menongautham) November 3, 2021