சீனு ராமசாமி பென்னிகுவிக் வாழ்க்கை வரலாற்றை எடுக்க இருப்பதாகத் தெரிகிறது.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயத்திற்கும் குடிநீர்த் தேவைக்கு உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர் ஜான் பென்னிகுவிக்.

பென்னிகுவிக் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக உருவாக்க இருப்பதாகப் பிரபல இயக்குனர் சீனு ராமசாமி அறிவித்துள்ளார். விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இவரது இயக்கத்தில் இடிமுழக்கம், மாமனிதன், இடம்பொருள் ஏவல் உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளன. இந்தப் படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது தனது அடுத்த படத்திற்கு தயாராகியுள்ளார் சீனு ராமசாமி.