டெல்லி: கடந்த 2020ம் ஆண்டில் நாடு முழுவதும் 3.75 லட்சம் பேர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக மத்திய போக்குவரத்துத்துறை தெரிவித்து உள்ளது.

மத்திய அரசின் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள தகவலின்படி,  நாடு முழுவதும் கடந்த ஆண்டு (2020) விபத்தில் 3,74,397 லட்சம்  உயிரிழந்து உள்ளனர்.

இதில் சாலை விபத்துகளில் மட்டுமே 35 சதவீதத்துக்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், மொத்தம் 1,33,201 பேர் உயிரிழந்து உள்ளனர் என்று தெரிவித்து உள்ளது. மேலும்  3.35 லட்சம் பேர் காயமடைந்து உள்ளனர்.

மொத்தம் நடைபெற்ற 3.54 லட்சம் சாலை விபத்துகளில் 60 சதவீத்ததுக்கு அதிகமான விபத்துகள் அதிக வேகத்தால் ஏற்பட்டதாகும்.

இந்த சாலை விபத்துகளில் 59.6 சதவீத சம்பவங்கள் கிராமப்புறங்களில் நடந்துள்ளன.

ரெயில்வேயை பொறுத்தவரை, கடந்த ஆண்டு நடந்த 13,018 விபத்துகளில் 11,968 உயிர்கள் பறிபோயுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.