சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கும், மலைவாழ் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணயின் கூறினார்.

தமிழகம் முழுவதும் இன்று 7வது மெகா தடுப்பூசி முகாம் 50ஆயிரம் இடங்களில் நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் 1600 முகாம்கள் நடைபெறுகிறது. சென்னை  அடையாறு கஸ்தூரிபாய் நகரில் நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர்  செய்தியாளர்களிடம் பேசியபோது, தற்போது 59 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. நவம்பர் மாதத்தில் மத்திய அரசிடம் இருந்து 1.40 கோடி லட்சம் தடுப்பூசிகள் வர உள்ளன என்றார். மேலும், இதுவரை தமிழ்நாடு முழுவதும் 5,73,901 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று  7-வது தடுப்பூசி முகாம் 50,000 இடங்களில் நடைபெறுகிறது.

தடுப்பூசிகளை செலுத்துவதில், மாற்றுத்திறனாளிகளுக்கும் மலைவாழ் மக்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கு சென்றே தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் பணிகளும் தொடர்ந்து வருகிறது. 2வது டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள், இன்றைய முகாமில் தவறாமல் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்.