டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,313 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளதுடன், 549 உயிரிழந்துள்ளனர். தொற்றில் இருந்து 13,543 பேர் குணமடைந்துள்ளனர். அதே வேளையில் கொரோனா தடுப்பூசியும் 105 கோடி பேருக்கு போடப்பட்டு உள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், புதிதாக மேலும் 15,981 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,42,60,470ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் மேலும் 549 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,57,740 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், மேலும் 13,543 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,36,41,175 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது நாடு முழுவதும்கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,61,555 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 56,91,175 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1,05,43,13,977 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 60,70,62,619 சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் 11,76,850 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “வெற்றிகரமாக 105 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பூசி இயக்கம் புதிய சாதனையை எட்டியிருப்பதால் மக்களுக்கு எனது வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.