டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,306 புதிய வழக்குகள், 443 இறப்புகள் மற்றும் 18,762 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை (காலை 8 மணி வரையிலான நிலவரம்) வெளியிட்டுள்ள தகவலின்படி கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 14,306 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கேரளாவில் மட்டும் 8,538 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மொத்த பாதிப்பு 3.41 கோடியை தாண்டியது. அதாவது மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,41,89,774 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று நாடு முழுவதுரும மேலும் 443 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் மட்டும் 71 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதன் காரணமாக மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,54,712 ஆக உயர்ந்தது.
நேற்று மட்டும் தொற்றில் இருந்து 18,762 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,35,67,367 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,67,695 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் இதுவரை 1,02,27,12,895 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 12,30,720 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.