துபாயில் நடைபெறும் டி-20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி இன்று பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது.
முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் கே.எல். ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 57 ரன்கள் எடுத்தார்.
39 ரன்கள் எடுத்த ரிஷப் பந்த் நான்காவது விக்கெட்டுக்கு கோலியுடன் சேர்ந்து 53 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இருபது ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்த இந்திய அணி, பாகிஸ்தான் அணிக்கு 152 ரன்களை இலக்காக நிர்ணயித்திருக்கிறது.
இரண்டாவதாக களமிறங்கியிருக்கும் பாகிஸ்தான் அணி 5 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 35 ரன்கள் எடுத்துள்ளது.