சென்னை

ன்று சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே பராமரிப்பு காரணமாக ஒரு சில ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

தென்னக ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டம் இன்று ஒரு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.

அதில்,

”பராமரிப்பு பணி காரணமாகக் கீழ்க்கண்ட மின்சார ரயில் சேவையில் இன்று (24-ந்தேதி) மற்றும் 31-ந்தேதி, நவம்பர் மாதம் 7ந்தேதி ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

*அதன்படி சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே காலை 11 மணிமுதல் மதியம் 2.30 மணி வரை இயக்கப்படும் மின்சார ரயில்களும், தாம்பரம்-கடற்கரை இடையே காலை 11.30 மணி முதல் மதியம் 3.30 மணி வரை இயக்கப்படும் மின்சார ரயில்களும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

* கடற்கரை-செங்கல்பட்டு இடையே காலை 11.15 மணி, மதியம் 12, 1, 1.20, 2, 3 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் கடற்கரை-தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* செங்கல்பட்டு-கடற்கரை இடையே காலை 10.15, 11 மணி, மதியம் 12.25, 1.25, 2.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம்-கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* திருமால்பூர்-கடற்கரை இடையே காலை 10.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக மதியம் 1.30 மணிக்கு திருமால்பூரில் இருந்து கடற்கரைக்குச் சிறப்பு ரயில் இயக்கப்படும்.”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.